திருவாரூர்
வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு
|குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
குடவாசல்;
குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.52 புதுக்குடியில் தந்தை பெரியார் சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டபட்டு வருவதை அவர் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அன்னவாசல், செருகளத்தூர், சீதக்கமங்கலம், சேதினிபுரம், கூந்தலூர், 18புதுக்குடி, மணவாளநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிடங்கள், சமையல் கூடங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது அவர், குடவாசல் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை குறித்த காலத்தில் முடித்து தர அதிகாரிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என கூறினார். அப்போது அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர் சுவாமிநாதன், ஊராட்சித் தலைவர்கள் 52 புதுக்குடி கண்ணன், அன்னவாசல் சங்கர், செருகளத்தூர் மணி, சீதக்கமங்கலம் ராமலிங்கம், மணவாளநல்லூர் பரகத்நிஷாசித்திக் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்