< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
ஜமாபந்தி நிகழ்ச்சியில் 25 மனுக்களுக்கு கலெக்டர் உடனடி தீர்வு
|27 May 2022 8:45 PM IST
ஜமாபந்தி நிகழ்ச்சியில் 25 மனுக்களுக்கு கலெக்டர் உடனடி தீர்வு செய்தார்.
தக்கலை:
தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் மொத்தம் 828 மனுக்களை பெற்று கொண்டதில் 25 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
அதாவது 15 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 10 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை மூலம் விசாரணை மேற்கொண்டு விரைவில் தீர்வு காணப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கல்குளம் தாசில்தார் (பொறுப்பு) ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, தலைமையிடத்து துணை தாசில்தார் முருகன், மண்டல துணை தாசில்தார் மகேஷ் மாரியப்பன், தலைமை நிலஅளவர் கிரிதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.