< Back
மாநில செய்திகள்
ஆணவ படுகொலையை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் - கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோரிக்கை மனு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஆணவ படுகொலையை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் - கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோரிக்கை மனு

தினத்தந்தி
|
18 April 2023 12:30 AM IST

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்துக்கு நீலம் பண்பாட்டு அமைப்பின் தலைமை குழு உறுப்பினர் உதயா தலைமையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து ஆணவ கொலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகம் முன் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- காதல் திருமணம் செய்யும் பட்டியல், பழங்குடியின மக்கள் ஆணவ கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 129 ஆணவ கொலைகள் நடந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளன. இதை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை வன்கொடுமை நிறைந்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து எங்கள் அமைப்பின் நிறுவனரும், இயக்குனருமான பா.ரஞ்சித் பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். எங்கள் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்