< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்   மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மறு மதிப்பீட்டு முகாம்  கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மறு மதிப்பீட்டு முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

தினத்தந்தி
|
2 Sep 2022 6:01 PM GMT

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மறு மதிப்பீட்டு முகாம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது

நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறையின் மூலம் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான மருத்துவ மறு மதிப்பீட்டு முகாம் நடந்தது. கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தேவிகா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவ ஆய்வு குழு மூலம் பயனாளிகளுக்கு வயது தளர்வு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி குமாரபாளையம் வட்டத்தில் 12 பேரும், ராசிபுரம் வட்டத்தில் 8 பேரும், மோகனூர் வட்டத்தில் 5 பேரும், சேந்தமங்கலம் வட்டத்தில் 6 பேரும், திருச்செங்கோடு வட்டத்தில் 9 பேரும், நாமக்கல் வட்டத்தில் 7 பேரும், பரமத்திவேலூர் வட்டத்தில் 9 பேரும், கொல்லிமலை வட்டத்தில் ஒருவரும் என மொத்தம் 57 பேர் கலந்து கொண்டனர். பரிசோதனைக்கு பின்னர் கண்பார்வை குறைபாடு உடைய 9 பேர், கை, கால் பாதிக்கப்பட்ட 17 பேர், காது கேளாத 13 பேர் மற்றும் வாய்பேச முடியாத 2 பேருக்கு வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்கவும், 6 பேருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பராமரிப்பு உதவித்தொகை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது‌.

மேலும் செய்திகள்