< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்  242 மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் போட்டி  கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் 242 மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் போட்டி கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
25 July 2022 4:48 PM GMT

நாமக்கல்லில் 242 மாணவ, மாணவிகள் பங்கேற்ற செஸ் போட்டி கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்

நாமக்கல்லில் நேற்று நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் 242 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதனை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்.

செஸ் போட்டி

தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி புகழ்பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த போட்டியை ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நேரில் பார்வையிட நாமக்கல் மாவட்டத்தில் 8 மாணவ, மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இவர்களை தேர்வு செய்ய பள்ளி மற்றும் ஒன்றிய அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இதில் வெற்றி பெற்ற 242 மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான செஸ்போட்டி நேற்று நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. இந்த போட்டியை கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மாவட்ட அளவில் முதல் இடங்களை பெறக்கூடிய 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் 8 பேர் மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியினை வருகிற 5-ந் தேதி பார்வையிடும் வாய்ப்பினை பெறுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியன், பழனிச்சாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட தலைமையாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்