< Back
மாநில செய்திகள்
மணிப்பூரில் அமைதி வேண்டி கூட்டு பிரார்த்தனை
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

மணிப்பூரில் அமைதி வேண்டி கூட்டு பிரார்த்தனை

தினத்தந்தி
|
9 July 2023 1:00 AM IST

மணிப்பூரில் அமைதி வேண்டி கூட்டு பிரார்த்தனை

பொள்ளாச்சி

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், அந்த மாநிலத்தில் அமைதி நிலவி அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழவும் வேண்டி பொள்ளாச்சி இந்திரா நகரில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் நேற்று சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இதற்கு கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் தீமோத்தி ரவீந்திரர் தலைமை தாங்கினார். இதில் திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இருந்து வந்த பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இரு பழங்குடியின மக்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு வருந்துகிறோம். அவர்களுக்கு அரசு செய்துள்ள உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அங்கு ஏற்பட்டு உள்ள கருத்து வேறுபாடுகளை களைய விரைவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த மாநில மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்ளப்படுவதாக கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பேராயர் தீமோத்தி ரவீந்தர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்