< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் ரூ.3¾ லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
|13 May 2023 12:34 AM IST
மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் ரூ.3¾ லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.
விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவிலில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணி புதுக்கோட்டை திருக்கோவில்கள் செயல் அலுவலர் முத்துராமன் தலைமையிலும், ஆய்வாளர் யசோதா முன்னிலையிலும் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.3 லட்சத்து 92 ஆயிரத்து 189-ம், 5 கிராம் தங்கமும், 291 கிராம் வெள்ளியும் வசூலாகியிருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, கோவில் பணியாளர்கள், தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பக்தர்கள் ஈடுபட்டனர்.