கன்னியாகுமரி
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.23 லட்சம் உண்டியல் வசூல்
|மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.23 லட்சம் உண்டியல் வசூலானது.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இவர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்த வசதியாக கோவிலில் 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 6 குடங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் கடந்த மே மாதம் 10-ந் தேதிக்கு பிறகு நேற்று திறந்து எண்ணப்பட்டது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் துளசிதரன் நாயர், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையர் தங்கம், பத்மநாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சண்முகம் பிள்ளை, ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சுயஉதவிக்குழு பெண்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.22 லட்சத்து 99 ஆயிரத்து 588 ரொக்கம், 50 கிராம் தங்கம், 138 கிராம் வெள்ளி ஆகியவை வருமானமாக கிடைத்தன. மேலும், 150 ரியால், 25 டாலர், 10 திர்காம் போன்ற வெளிநாட்டு பணமும் வசூலாகி இருந்தது.
---