< Back
மாநில செய்திகள்
உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 45 லட்சம் காணிக்கை வசூல்
திருச்சி
மாநில செய்திகள்

உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 45 லட்சம் காணிக்கை வசூல்

தினத்தந்தி
|
24 March 2023 1:13 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 45 லட்சம் காணிக்கை வசூலானது. மேலும் 3¾ கிலோ தங்கமும் கிடைத்தது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 45 லட்சம் காணிக்கை வசூலானது. மேலும் 3¾ கிலோ தங்கமும் கிடைத்தது.

சமயபுரம் மாரியம்மன்

சமயபுரத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும், குடும்பம் செழிக்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வருவார்கள்.

அப்படி வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்கள் மூலம் தங்கள் காணிக்கைகளை செலுத்துவார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோவில் நிர்வாகம் சார்பாக மாதமிருமுறை எண்ணப்படுவது வழக்கம்.

காணிக்கை

அதன்படி, இந்த மாதம் 2-வது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி, மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

இதில், காணிக்கையாக ரூ.1 கோடியே 45 லட்சத்து 9 ஆயிரத்து 609 ரொக்கமும், 3 கிலோ, 860 கிராம் தங்கமும், 6 கிலோ 475 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்