< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி குற்றம் - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
|31 Oct 2022 5:29 PM IST
கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை,
கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. நன்கொடைகளுக்கு வருமான வரித்துறை, வரி விதித்த உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் நன்கொடை வசூலிப்பதை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த உத்தரவில் கூறியுள்ளது. நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகளுடைய விவரங்களை தெரிவிக்க இணையதளத்தை உருவாக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அறக்கட்டளை என்கிற பெயரில் கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பதற்கு வருமான வரித்துறை வரி விதிப்பது என்பது சரியே என்று இந்த உத்தரவில் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.