< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
3,265 ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு
|7 Jan 2023 12:19 AM IST
மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதிகளில் 3,265 ஆலிவ்ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வன சரகத்திற்கு உட்பட்ட கொட்டாயமேடு, கூழையார், வானகிரி ஆகிய கடற்கரை பகுதிகள் உள்ளன. இங்கு ஆலிவ் ரெட்லி என்னும் கடல் ஆமை முட்டைகள் பொரிப்பகம் உள்ளது. ஆண்டுதோறும் ஆலிவ்ரெட்லி என்னும் கடல் ஆமைகள் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை மேற்கண்ட கடற்கரைக்கு வந்து முட்டைகளை இட்டு செல்வது வழக்கம். அந்த முட்டைகளை வனத்துறையினர் சேகரிப்பு பொரிப்பகத்திற்கு எடுத்து செல்வர். தொடர்ந்து 45 முதல் 50 நாட்களுக்குள் அந்த முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளியே வரும். பின்னர் அந்த குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விடுவது வழக்கம். அதன்படி இதுவரை சீர்காழி வனச்சரக பணியாளர்கள் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள கடற்கரையில் இருந்து சுமார் 3,265 ஆலிவ் ரெட்லி கடல் ஆமை முட்டைகளை சேகரித்து பாதுகாத்து வருகின்றனர்.