ராமநாதபுரம்
இலங்கைக்கு அனுப்ப 1 டன் அரிசி, மளிகை பொருட்கள் சேகரிப்பு
|திருவாடானையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் இலங்கைக்கு அனுப்ப 1 டன் அரிசி, மளிகை பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
தொண்டி,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அன்றாட உணவு தேவைகளுக்காக பொருட்கள் கிடைக்காமல் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு திருவாடானை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவாடானை ஓரியூர் நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சி மாவட்ட பொருளாளர் ஓரிக்கோட்டை காளீஸ்வரன் தலைமை தாங்கினார். திருவாடானை சட்டமன்ற தொகுதி துணைத்தலைவர் அம்மன் ராஜேந்திரன், இணைச் செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் உதய நாராயணன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் வெண்குளம் ராஜு, நாடாளுமன்றச் செயலாளர் குமரன், மாவட்ட தலைவர் நாகூர் கனி ஆகியோரிடம் திருவாடானை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒரு டன் அரிசி மூடைகள், மளிகை பொருட்கள், கோதுமை மூடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.இதில் ஜாக்சன், மெர்லின், சித்திக், மதி, பழனி, சங்கர், ஆனந்த், கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.