< Back
மாநில செய்திகள்
பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி
மாநில செய்திகள்

பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி

தினத்தந்தி
|
23 Dec 2023 11:38 PM IST

‘அன்பு உள்ளங்கள்’ என்ற குழு மூலமாக சக காவலர்கள் இணைந்து மாநில அளவில் நிதி உதவி பெற்றனர்.

சென்னை,

காவல் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி வழங்கிய நிகழ்ச்சி சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் நடைபெற்றது.

காவலர் ராம்குமார் சென்னையில் பணியாற்றியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஜூன் மாதம் உயிரிழந்தார். இதேபோல், மதுரையைச் சேர்ந்த காவலர் கணபதி என்பவர் ஜூலை மாதம் சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இவர்களின் குடும்பத்தினருக்கு 2009-ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் இணைந்து 'அன்பு உள்ளங்கள்' என்ற குழு மூலமாக மாநில அளவில் நிதி உதவி பெற்றனர். அவ்வாறு பெறப்பட்ட நிதியை தலா 24 லட்சம் ரூபாயாக ராம்குமார் மற்றும் கணபதி ஆகியோரின் குடும்பத்தினருக்கு வழங்கினர்.


மேலும் செய்திகள்