< Back
மாநில செய்திகள்
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி
நீலகிரி
மாநில செய்திகள்

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி

தினத்தந்தி
|
8 Sep 2023 9:45 PM GMT

அய்யன்கொல்லி அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி உள்ளது.

பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை, தட்டாம்பாறை, கோட்டப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வினியோகம் செய்ய மூலைக்கடையில் மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. சோலாடி குடிநீர் திட்டத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நீர்தேக்க தொட்டி கட்டி பல ஆண்டுகளை கடந்தும் பராமரிப்பு பணி நடைபெற வில்லை. பழுதடைந்த நீர்தேக்க தொட்டியை சீரமைக்கவும் இல்லை. இதனால் தொட்டியில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. அதன் தூண்கள் உடைந்து காணப்படுகிறது. தொட்டியின் கீழ் சிமெண்டு பூச்சு பெயர்ந்து உள்ளது. இதனால் மேல்நிலை குடிநீர்தேக்க தொட்டி எப்போது வேண்மானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. எனவே, பழுதடைந்த குடிநீர் தேக்க தொட்டியை இடித்து விட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்