< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை- கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் - மரகக்கிளைகளை உடைத்து அட்டகாசம்
|21 April 2023 11:16 PM IST
கிராம மக்களும், வனத்துறையினரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் சின்ன தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை பொதுமக்கள் உதவியுடன் வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
நஞ்சுண்டாபுரம் கிராமத்துக்குள் அதிகாலை புகுந்த யானை கூட்டம், வீடுகள் முன்பு இருந்த மரங்களின் கிளைகளை உடைத்ததோடு, சாலைகளில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்தன. இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்களும், வனத்துறையினரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.