< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை: வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
|14 July 2022 10:41 PM IST
வால்பாறையில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவையில் அவ்வப்போது கன மழை பெய்கிறது. வால்பாறை பகுதியில் இரவு பகலாக விட்டு விட்டு கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வால்பாறை பகுதியில் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து கொண்டேயிருக்கிறது. இதனால் ஆறுகள், நீர் வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்தது மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்