< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கனமழை: வால்பாறை தாலூக்காவில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
|6 July 2022 7:25 PM IST
வால்பாறையில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அவ்வபோது பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.