வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்
|தமிழ்நாட்டிலேயே ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற முதல் சட்டமன்ற அலுவலகம் கோவை தெற்கு.
சென்னை,
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எனது எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ள முதல் எம்.எல்.ஏ. நான்தான். ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையிலும், பா.ஜனதா தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
2011-ம் ஆண்டு குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்தது. இந்த தரச்சான்றை பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகம், மக்களுக்கு அளித்து வரும் சேவை மற்றும் அதன் செயல்பாட்டில் உள்ள சர்வதேச தரத்தை, இந்த சான்றளிப்பு அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சாதனையை சபாநாயகர் அப்பாவுவிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்தேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.