< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை: 123 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரெயில் பாதையில் சீரமைப்பு பணி
|16 Feb 2023 3:47 PM IST
மலை ரெயில் பாதையில் உள்ள சிறு பாலங்களை சீரமைக்கும் பணியில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் ரெயில் நிலையம் வரை கட்டப்பட்ட இந்த மலை ரெயில் பாதை சுமார் 123 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.
இந்த மலை ரெயில் பாதையில் மழை நீர் வடிகால்கள் மற்றும் சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த 7 சிறு பாலங்களை சீரமைக்கும் பணியில் தற்போது ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும், ரெயில் சேவையை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.