< Back
மாநில செய்திகள்
கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் மகன் உயிரிழப்பு - தொண்டர்கள் அதிர்ச்சி

அதிமுக எம்.எல்.ஏ.- அம்மன் அர்ஜூனன்

மாநில செய்திகள்

கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் மகன் உயிரிழப்பு - தொண்டர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
3 Sept 2023 9:26 AM IST

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனனின் மகன் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை,

கோவை வடக்கு தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் அம்மன் அர்ஜூனன். இவரது மகன் கோபாலகிருஷ்ணன். அதிமுகவில் கோவை தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட இணைச் செயலாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.

கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் மகனின் திடீர் மரணம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்