திருச்சி
முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறை முற்றுகை-ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி
|முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.
முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை சிறைச்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.
தலைமை நிர்வாகக்குழு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக தலைமை நிர்வாகக்குழு கூட்டம் திருச்சி காஜாநகர் பகுதியில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்.எல்.ஏ. மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை சிறை முற்றுகை
20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறைச்சாலைகளில் வாழ்நாள் தண்டனை பெற்று இருக்கக்கூடிய முஸ்லிம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். இதற்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கோவை மண்டல த.மு.மு.க. சார்பில் வருகிற ஜூலை மாதம் 9-ந் தேதி கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். கலைஞர் நூற்றாண்டுவிழாவையொட்டி தமிழக அரசு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள 37 முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.
கல்வி உதவித்தொகை
2019-20 பள்ளி படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த சூழலில் மத்திய பா.ஜ.க. அரசு சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ரத்து செய்துவிட்டது. மத்திய அரசு ரத்து செய்த கல்வி உதவித்தொகையை தமிழக அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பா.ஜ.க.வின் பிடியில் அ.தி.மு.க. உள்ளது. அதில் இருந்து அவர்கள் ஒருபோதும் வெளியே வர முடியாது. அவர்கள் இருவரும் சண்டைபோடுவதுபோல் நாடகம் நடத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-