< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை: மதுபோதையில் வடமாநில இளைஞர்களை தாக்கி பணம், செல்போன்கள் பறிப்பு - 5 பேர் கைது
|19 Sept 2022 3:26 PM IST
கோவையில் மதுபோதையில் வடமாநில இளைஞர்களை தாக்கி பணம், செல்போனை பறித்த 5 பேரை போலீசார் செய்தனர்.
கணபதி,
கோவை மாவட்டம் கணபதி அருகே சித்தாதோட்டத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில இளைஞர்கள் சத்யாந்திர சிங் (வயது27), மகேந்திரசிங்(25) ஆகிய 2 பேர் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி சென்றுள்ளனர்.
அப்போது கடை முன்பு மதுகுடித்துக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கியது. பின்னர், அவர்களிடம் இருந்த ரூ. 4 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது வடமாநில இளைஞர்களிடம் பணத்தை பறித்த விஜயகுமார்(எ)பிளாக்கி(வயது25), பிரவீன்குமார்(27),பால்விக்டர்(26), அருண்பிரசாத்(24), பிரவீன்(21) ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.