< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை வளர்ச்சி திட்டங்கள் - அமைச்சர் முத்துசாமி நியமனம்
|6 July 2023 1:59 PM IST
அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்துவந்த கோவை வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சர் பதவி முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவை,
அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்துவந்த இலாகாக்கள் பிற அமைச்சர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில்பாலாஜி வகித்துவந்த கோவை வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சர் பதவி முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர், முத்துசாமி, அனைத்து துறை சார்ந்த அலுவர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப்பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்று அடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனையை வழங்குவார் என தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்துவந்த டாஸ்மாக் நிர்வாக பணிகளை அமைச்சர் முத்துசாமிக்கு கொடுத்த நிலையில், தற்போது, கோவை பொறுப்பு அமைச்சர் பதவியும் முத்துசாமிக்கு வழங்கப்பட்டு உள்ளது.