கோவை: பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம்
|பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை,
கோவை ரெயில் நிலைய பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (சனிக்கிழமை) முதல் 23-ந் தேதி வரையும், 25-ந் தேதியும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 21, 22, 23 மற்றும் 25-ந் தேதிகளில் ஈரோடு-கோவை ரெயில் ஈரோட்டில் காலை 7.50 மணிக்கு புறப்பட்டு இருகூர் வரை மட்டுமே இயக்கப்படும். மதுரை-கோவை ரெயில் நாளை 22, 23 மற்றும் 25-ந் தேதிகளில் மதுரையில் காலை 7 மணிக்கு புறப்பட்டு போத்தனூர் வரை இயக்கப்படும்.
பாட்னா-எர்ணாகுளம் ரெயில் இன்று முதல் 22-ந் தேதி வரை இருகூர், போத்தனூர் வரை இயக்கப்படும். இந்த ரெயில் கோவை ரெயில் நிலையத்துக்கு செல்லாது. சில்கார்-திருவனந்தபுரம் ரெயில் வருகிற 22-ந் தேதி வரை இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும். சென்னை எழும்பூர்-மங்களூரு ரெயில் 22, 23-25-ந் தேதிகளில் இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் பீளமேடு, கோவை வடக்கு, கோவை ரெயில் நிலையங்களுக்கு செல்லாது. திப்ருகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் 22, 23, 25-ந் தேதிகளில் இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும்.
ஆலப்புழா-தன்பாத் ரெயில் 22, 23, 25-ந் தேதிகளில் போத்தனூர், இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் கோவைக்கு செல்லாது. புதுடெல்லி-திருவனந்தபுரம் ரெயில் 22, 23, 25-ந் தேதிகளில் இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்-பெங்களூரு ரெயில் 22, 23, 25-ந் தேதிகளில் இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது. ஈரோடு-பாலக்காடு ரெயில் 23, 25-ந் தேதிகளில் ஈரோட்டில் காலை 7.15 மணிக்கு புறப்பட்டு இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் சிங்காநல்லூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ரெயில் நிலையங்களுக்கு செல்லாது.
இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.