< Back
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு சம்பவம் - நெல்லையில் மதகுரு வீட்டில் போலீசார் சோதனை...!
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம் - நெல்லையில் மதகுரு வீட்டில் போலீசார் சோதனை...!

தினத்தந்தி
|
27 Oct 2022 5:30 PM IST

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லையில் மதகுரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

கோவையில் கடந்த 23ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் வாலிபர் பலியானார். கார் வெடிப்பு தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கோவை கார் வெடிப்பு வழக்கின் விசாரணையை தேசிய புலான்வு அமைப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லை மதகுரு முகமது உசைன் மன்பை வீட்டில் நெல்லை மாநகர போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முகமது உசைன் கோவையில் இஸ்லாமிய மதகுருவாக இருந்துள்ளார். மேலும் முகமது உசைன் இஸ்லாமிய பிரச்சார இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இடம்பெற்றுள்ளார்.

முகமது உசைன் மன்பை அடிக்கடி கோவை சென்று வந்த நிலையில் அவரது வீட்டில் போலீசார் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். முகமது உசைன் மன்பையின் தொலைபேசி இணைப்பு, செல்போன் இணைப்பு உள்ளிட்டவற்றை போலீசார் விசாரித்து வருகின்றனர். சுமார் 50-க்கு மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்