< Back
மாநில செய்திகள்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மிகப்பெரிய பயங்கரவாத செயல் - ஹெச்.ராஜா கருத்து
மாநில செய்திகள்

"கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மிகப்பெரிய பயங்கரவாத செயல்" - ஹெச்.ராஜா கருத்து

தினத்தந்தி
|
27 Oct 2022 11:59 AM IST

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை மிகப்பெரிய பயங்கரவாத செயல் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

கோவை,

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை மிகப்பெரிய பயங்கரவாத செயல் என கூறியுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக முதல்வர் ஸ்டாலின் அதனை கண்டிக்காதது 1998 ஆம் ஆண்டு சம்பவத்தை நினைவுபடுத்துவதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், மிகப் பெ‌ரிய பயங்கரவாத செயல் நடந்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதை கண்டிக்கவில்லை. இது எனக்கு 1998 ஆம் ஆண்டு சம்பவத்தை நினைவுபடுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.

அப்போது நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 60 பேர் கொல்லப்பட்ட சூழலில், பயங்கரவாதிகளை கண்டிக்காமல் ஆர்.எஸ்.எஸ் ஐ ஆக்டோபஸ் என்று விமர்சித்தார் எனவும், திமுக மாறாது எனவும் எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்