< Back
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 3 பேர் கைது
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 3 பேர் கைது

தினத்தந்தி
|
7 Dec 2022 5:29 PM IST

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கோவை,

கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முபின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாரூதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று கைது செய்துள்ளனர். வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ் கான் ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்