< Back
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி; உக்கடம் பகுதியில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பறிமுதல் - போலீஸ் நடவடிக்கை
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி; உக்கடம் பகுதியில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பறிமுதல் - போலீஸ் நடவடிக்கை

தினத்தந்தி
|
28 Oct 2022 11:28 PM IST

நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கும் இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை,

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, கோவை உக்கடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிற்கும் வாகனங்கள், நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் வாகனங்கள் உள்ளிட்டவை குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அங்குள்ள மெக்கானிக் கடைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். வாகனத்தின் பதிவு எண், ஆவணங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்த போலீசார், நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் இருக்கும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்