< Back
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு: கைதான 6 பேருக்கு ஜன.17 வரை காவல் நீட்டிப்பு
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு: கைதான 6 பேருக்கு ஜன.17 வரை காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
8 Jan 2023 2:31 PM IST

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேருக்கு ஜன.17-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் முகமது அசாரூதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்காக தொடர்ந்து காவல் நீட்டுப்பு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது கோவை கார் வெடிப்பு சம்பவதில் கைதான 6 பேரையும் வரும் 17-ம் தேதி வரை காவலில் நீட்டிப்பு செய்து பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்