< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவை கார் வெடிப்பு: தாயின் அறிவுரையால் சரணடைந்த சகோதரர்கள்!
|31 Oct 2022 12:03 PM IST
முபின் காரில் சிலிண்டர் ஏற்றிய 3 பேரும் அவர்களது தாயார் கூறியதால் தாமாக போலீசில் சரணடைந்துள்ளனர்.
கோவை
கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் அதிகாலை கார் வெடித்து அதில் இருந்தவர் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபின் வீட்டிலிருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியானது. இந்த சிசிடிவி காட்சிகளில் ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் இருக்கின்றனர். அவர் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் முபின் காரில் சிலிண்டர் ஏற்றிய 3 பேரும் அவர்களது தாயார் கூறியதால் தாமாக போலீசில் சரணடைந்துள்ளனர்.
அவர் சகோதரர்கள் பிரோஸ், நவாஸ் மற்றும் அண்டை வீட்டுக்காரரான முகமது ரியாஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது. தாயார் அறிவுரையின் பேரில் சகோதரர்கள் அரணடைந்து உள்ளனர்.