< Back
மாநில செய்திகள்
தர்மபுரி ஏல அங்காடிக்கு  பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது

தினத்தந்தி
|
19 Oct 2022 6:45 PM GMT

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடு வரத்து சற்று குறைந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 1,253 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.675-க்கும், குறைந்தபட்சமாக ரூ.305-க்கும், சராசரியாக ரூ.577.91-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 24 ஆயிரத்து 233 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்