< Back
மாநில செய்திகள்
தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம்
கரூர்
மாநில செய்திகள்

தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
7 July 2023 12:25 AM IST

தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

நடையனூர் அருகே உள்ள இளங்கோ நகர் வெள்ளதாரை பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 40). இவரின் தோட்டத்தில் உள்ள தென்னை மரங்கள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் சில தென்னை மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

மேலும் செய்திகள்