< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி
|12 Jun 2023 12:54 AM IST
விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே உள்ள நதிக்குடி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மைதுறை உதவி இயக்குனர் முத்தையா தலைமை தாங்கினார். நதிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பாகீரதி மாரிமுத்து முன்னிலை வகித்தார். நதிக்குடி, சிவனாண்டிபட்டி, ஆத்தூர், சுப்பிரமணியபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் 300 பேருக்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் உதவி வேளாண்மைதுறை அலுவலர் கருப்பசாமி, துணை வேளாண்மைதுறை அலுவலர் முத்துகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.