< Back
மாநில செய்திகள்
ரூ.6 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
நாமக்கல்
மாநில செய்திகள்

ரூ.6 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

தினத்தந்தி
|
24 Feb 2023 6:45 PM GMT

பரமத்திவேலூரில் ரூ.6 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று முன்தினம் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 531-க்கு ஏலம் போனது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 136 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.19-க்கும், சராசரியாக ரூ.78.59-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 6 ஆயிரத்து 749-க்கு ஏலம் போனது.

மேலும் செய்திகள்