< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்ரூ.23½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
|11 Aug 2023 12:15 AM IST
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் ஆடி பதினெட்டு பண்டிகையையொட்டி மின்னணு தேசிய வேளாண்மை சந்தை விடுமுறை என்பதால் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறவில்லை. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 31 ஆயிரத்து 15 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.78.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.22-க்கும், சராசரியாக ரூ.75.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.23 லட்சத்து 47 ஆயிரத்து 525-க்கு ஏலம் நடைபெற்றது.