< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பெண்ணை கர்ப்பமாக்கிய தேங்காய் வியாபாரி கைது
|2 May 2023 1:46 AM IST
பெண்ணை கர்ப்பமாக்கிய தேங்காய் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
லால்குடி:
மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை பகுதியை சேர்ந்த கணேசனின் மகன் சரவணன்(வயது 39). தேங்காய் வியாபாரி. இவர் சமயபுரம் அருகே தேங்காய் விற்பனை செய்தபோது, 34 வயதுடைய ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமாகி உள்ளார். இது குறித்த புகாரின்பேரில் சரவணன் மீது லால்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகாயனி வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.