< Back
மாநில செய்திகள்
ரூ.1½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை
திருப்பூர்
மாநில செய்திகள்

ரூ.1½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை

தினத்தந்தி
|
20 March 2023 10:41 PM IST

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை செய்யப்பட்டது.

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனை செய்யப்பட்டது.

ரூ.1½ லட்சத்திற்கு விற்பனை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது.

இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 விவசாயிகள் 41 மூட்டைகள் (2,048 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 3 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கு பருப்புகள் விற்பனையானது.

தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.83-க்கும், குறைந்த பட்சமாக ரூ.66-க்கும், சராசரியாக ரூ.82-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் செய்திருந்தார்.

இருப்பிடத்திற்கு சென்று

தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் பண்ணை வாயில் முறையில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று 313 கிலோ அளவுள்ள தேங்காய் பருப்பு விற்பனை செய்து தரப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் ஆகும்.

விவசாயிகளின் இருப்பிடத்திற்கு சென்று தேங்காய் பருப்பு விற்பனை செய்து தரப்பட்டு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதால் வாகன செலவு, ஏற்றுக்கூலி உள்ளிட்ட செலவுகள் தவிர்க்கப்பட்டதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்