< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.13 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
|8 Aug 2022 7:17 PM IST
காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.13 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
காரிமங்கலம்:
காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை மதியம் முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. இந்த நிலையில் நேற்று நடந்த சந்தையில் காரிமங்கலம், காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி, வேலம்பட்டி, பண்ணந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சுமார் 1 லட்சம் அளவிலான தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தேங்காய் அளவை பொறுத்து ரூ.6 முதல் ரூ.12 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும் தேங்காய் வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில் ரூ.13 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.