< Back
மாநில செய்திகள்
திருப்பூர்
மாநில செய்திகள்
ரூ.1¾ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
|10 July 2023 10:14 PM IST
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 51 மூட்டைகள் (2677 கிலோ), தேங்காய் பருப்பினை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பை அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.76 -க்கும், குறைந்த பட்சமாக ரூ.50-க்கும் ஏலம் எடுத்தனர். அதன்படி மொத்தம் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கு ஏலம்போனது. இந்த தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செ.ராமன் தெரிவித்தார்.