< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
உணவுப்பொருளில் கரப்பான் பூச்சி
|25 Oct 2023 1:33 AM IST
உணவுப்பொருளில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பேக்கரி கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி-விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு பேக்கரியில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 8 வெஜ் பப்ஸ் வாங்கி உள்ளார். அதில் ஒரு பப்சை சாப்பிட முயன்ற போது அதில் கரப்பான் பூச்சி இறந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர் பிரச்சினை செய்ய வேண்டாம், வேறு பப்ஸ் தந்து விடுவதாக கூறி சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.ஆனால் மறுப்பு தெரிவித்த வாடிக்கையாளர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் செய்தார். அதனை தொடர்ந்து பேக்கரிக்கு வந்த உணவு பாதுகாப்பு அதிகாரி பேக்கரி மற்றும் கரப்பான் பூச்சி இறந்து கிடந்த பப்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் பேக்கரி கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.