< Back
மாநில செய்திகள்
ரூ.1¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

ரூ.1¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

தினத்தந்தி
|
31 Aug 2023 12:25 AM IST

ரூ.1¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.

அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் ராஜேந்திரபுரம் தென்னை வணிக வளாகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மறைமுக ஏலம் முறையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நேற்று நடைபெற்ற ஏலத்தில் 13 விவசாயிகள் 1,850 கிலோ கொப்பரை தேங்காய்களை கொண்டு வந்தனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் வணிகர்கள் கலந்து கொண்டனர். அதிக பட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.78.15-க்கும் குறைந்தபட்சம் ரூ.77- க்கும் ஏலம் போனது. இதில் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 59-க்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது என்று அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்