< Back
மாநில செய்திகள்
நிலக்கரி சுரங்கம்: அனுமதிக்கமாட்டோம்... அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திட்டவட்டம்
மாநில செய்திகள்

நிலக்கரி சுரங்கம்: அனுமதிக்கமாட்டோம்... அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

தினத்தந்தி
|
4 April 2023 3:46 PM IST

இதுகுறித்து விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செய்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் தடை செய்யப்பட்ட சுரங்கங்கள், ஹைட்ரோ கார்பன்கள் என எந்த திட்டமாக இருந்தாலும் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை. விவசாயிகளை பாதுகாப்பதிலும், சுரங்கங்களை தடை செய்வதிலும் முதல் அமைச்சர் உறுதியாக உள்ளார். எனவே இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்