< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
|18 Oct 2023 3:00 AM IST
ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் சென்னித்துரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சாதிக்அலி முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் பிச்சைவேல், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், நிர்வாகிகள் ஜெயசீலன், சக்திவேல், பிச்சைமுத்து, கூட்டுறவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சங்கமாக மாற்றும் முடிவை கைவிடவேண்டும். மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி போனசாக ரூ.8,400 வழங்க வேண்டும். பொதுவினியோக திட்டத்துக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.