திட்டங்களின் நிலை குறித்து அதிகாரிகளுடன் 2-வது நாளாக முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை
|அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 19 அரசு துறை செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை, சட்டப்பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகள் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளாக இன்று அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, செயல்பாடு, தாமதத்திற்கான காரணம் பற்றி துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை விரைவுபடுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் துறைவாரியாக செயலாளர்கள் விளக்கமளிக்க உள்ளனர்.