< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நிதி வசதி குறைவாக உள்ள 2 ஆயிரம் கோவில்களுக்கு ரூ.40 கோடி நிதி உதவி: முதல்-அமைச்சர் வழங்கினார்
|1 Nov 2023 1:39 PM IST
ஒவ்வொரு கோவிலுக்கும் தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.40 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நிதி வசதி குறைவாக உள்ள 2 ஆயிரம் கோவில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை மூலமாக, ஒவ்வொரு கோவிலுக்கும் தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.40 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு' என்ற சிறப்பு மலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார்.