< Back
மாநில செய்திகள்
மேகதாது அணையை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
மாநில செய்திகள்

'மேகதாது அணையை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும்' - பொன்.ராதாகிருஷ்ணன்

தினத்தந்தி
|
16 July 2023 10:02 PM IST

மேகதாது அணை குறித்த நிலைப்பாட்டை முதல்-அமைச்சர் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சை,

எதிர்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு செல்ல உள்ளார். இந்நிலையில் பெங்களூரு செல்லும் முதல்-அமைச்சர், கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டாது என்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டும் பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தஞ்சையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை அழைத்துக் கொண்டு கர்நாடகத்திற்கு சென்று, மேகதாது அணையை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்ற நிலையை எடுத்துச் சொல்லி, கர்நாடக அரசு அணையை கட்டாது என்ற நிலையை உறுதிப்படுத்தி, பின்னர் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு வர வேண்டும்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்