< Back
மாநில செய்திகள்
டுவிட்டரின் முகப்புப் படத்தை தேசியக்கொடியாக மாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

டுவிட்டரின் முகப்புப் படத்தை தேசியக்கொடியாக மாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
14 Aug 2023 5:31 PM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்றியுள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒட்டு மொத்த நாடும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்றியுள்ளார். மேலும் 'வீடுகள் தோறும் தேசிய கொடி' இயக்கத்தின் ஒரு பகுதியாக மக்களும் தங்களது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படங்களை தேசிய கொடியாக மாற்ற வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்றியுள்ளார். அதில் தேசியக்கொடிக்கு மேல் 'இந்தியா' (INDIA) என்ற வார்த்தையும் தேசியக்கொடிக்கு கீழே 'ஒன்றுபட்டு நிற்கிறோம்' (UNITED WE STAND) என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்