< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கொளத்தூரில் ரூ.71.81 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு மருத்துவமனை - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
|8 March 2023 8:53 PM IST
பன்னோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை,
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர், அரசு புறநகர் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளுடன் ரூ. 71.81 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு மருத்துவமனை வளாகம் அமைய உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.