< Back
மாநில செய்திகள்
ஆயுதபூஜையையொட்டி டிரைவர்களுக்கு புத்தாடை
சிவகங்கை
மாநில செய்திகள்

ஆயுதபூஜையையொட்டி டிரைவர்களுக்கு புத்தாடை

தினத்தந்தி
|
6 Oct 2022 12:26 AM IST

ஆயுதபூஜையையொட்டி டிரைவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆட்டோ, கார், வேன், உள்ளிட்ட கனரக வாகன டிரைவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆயுத பூஜை அன்று சீருடை, புத்தாடைகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக 16-வது ஆண்டான இந்த ஆண்டு தொகுதியில் உள்ள அனைத்து ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள், தொழிலாளர்களுக்கு ஆயுத பூஜையையொட்டி சீருடை, புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சரின் சொந்த நிதியில் வழங்கப்படும் சீருடைகள் சூரக்குடியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி தலைமையில் வழங்கப்பட்டது.

சூரக்குடி ஊராட்சி தலைவர் எம்.ஆர்.கே. முருகப்பன், சூரக்குடி பழனியப்பன் மற்றும் கொத்தமங்கலம் தட்சிணாமூர்த்தி, பூ கடை நெல்லி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்