கடலூர்
மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்
|திருவள்ளுவர் தினத்தையொட்டி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் கலெக்டர் தகவல்
கடலூர்
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
திருவள்ளுவர் தினம் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், அரசு மதுபான கூடங்கள், எப்.எல்-2 மற்றும் எப்.எல்-3 பார்கள் அனைத்தையும் மூட வேண்டும். இதேபோல் எப்.எல்-11 அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களையும் மூட வேண்டும்.
இதை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலும், அரசு மதுபான கூடங்கள் மற்றும் எப்.எல்-2, எப்.எல்-3 மதுபான கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல்-2, எப்.எல்-3 உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதேபோல் வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தன்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மூட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.